பிலவ வருடம் 2021 தமிழ் புத்தாண்டு : கிரக நிலைப்படி பொது பலன்கள் எப்படி இருக்க போகுது?
Astrology
Horoscope
12 Zodiacs
Tamil New year 2021
General Beneficial Prediction
By Balakumar
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தமிழ் ஆண்டுகள் வரிசைப்படி பிலவ வருடம் தொடங்குகிறது.
அடுத்த ஒரு வருடம் பிலவ வருடப்படி எப்படிப்பட்ட பலனை மக்கள் பெறப் போகின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.
பிலவ ஆண்டு கிரக நிலை
- கால சக்கரத்தில் 10வதாக இருக்கு மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார்.
- கும்பத்தில் குரு அதிசார பெயர்ச்சி பெற்று இருக்கிறார். செப்டம்பர் 14ல் வக்ர நிலைப் பெற்று மீண்டும் மகரத்திற்குத் திரும்புவார்.
- பின்னர் நவம்பர் 20 மீண்டும் கும்ப ராசிக்கு நேர் கதியில் சாதாரண குரு பெயர்ச்சி அடைவார்.
- கேது விருச்சிகத்தில் உச்சமாக இருக்கிறார். ராகு ரிஷபத்தில் உள்ளார்.
ஆண்டு தொடங்கும் போது உள்ள கிரக நிலவரம்
- மேஷத்தில் சூரியன், புதன், சூரியன்
- ரிஷபத்தில் ராகு
- மிதுனத்தில் செவ்வாய்
- விருச்சிகத்தில் கேது
- மகரத்தில் ஆட்சி பெற்ற சனி
- கும்பத்தில் அதிசார பெயர்ச்சி பெற்ற குரு
பொது பலன்கள்
- கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரக்கூடிய இந்த இந்த பிலவ வருடத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சற்று கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.
- பெண்களுக்கு மிகவும் உகந்த ஆண்டாக இருக்கும் இந்த பிலவ வருடத்தில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வரன் விரைவில் அமையும். பெண்களுக்கான ஆரோக்கியம் அதிகரிக்கும். பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
- பத்திரிக்கை, ஊடகங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பில வருடம் சுக்கிர திசையில் ஆரம்பிப்பதால் இந்த ஆண்டு மழைப் பொழிவு சுமாராக இருக்கும்.
- இதனால் விவசாயம் பெரியளவில் பாதிக்கப்படாது. இருப்பினும் சில இடங்களில் விவசாயம் பாதிக்கப்படலாம். அதே போல் கால்நடைகள் இதனால் பாதிக்கும். பயிர் விதைப்பின் போது ஆலோசனை தேவை.
- பலருக்கும் வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல வேண்டும் என முயல்பவர்களுக்கு அந்த ஆசை நிறைவேறும்.
- சனி ஆட்சி பெற்ற வீட்டில் குரு இருக்கிறார். இதனால் தேர்தல் முடிவுகள் மக்களை சார்ந்ததாக இருக்கும்.
- பிலவ வருடத்திற்கு ராஜாவான செவ்வாய் பகவான் வருகிறார்.இதன் காரணமாக யாராக இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். புதுவித நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
- குருவின் பெயர்ச்சி மூன்று முறை நிகழக்கூடியதாக இருப்பதால், அதாவது தற்போது ஏப்ரல் 5ல் மகரத்திலிருந்து கும்பத்திற்கு அதிசாரமாக சென்றிருக்கக்கூடிய குரு பகவான், செப்டம்பரில் மகரத்திற்கு திரும்புவார்.
- நவம்பர் 13ல் மகரத்திலிருந்து முறைப்படி கும்பத்திற்கு பெயர்ச்சி ஆவார்.
- பின்னர் 2022ல் பங்குனி மாதத்தில் மீண்டும் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு அதிசாரமாக செல்லக்கூடும். அதனால் மூன்றும் முறை இந்த நிகழ்வு நடக்கிறது.
- பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆண்டாக இந்த பிலவ வருடம் இருக்கும். அவர்களின் சொல்படி உலகம் இயங்கக்கூடிய நிலை இருக்கும்.
- பெண்களின் முன்னேற்றம், முன்னுரிமை கிடைக்கலாம். அவர்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை. தைராய்டு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைப் பிறப்பில் பிரச்சினை தோன்றும். உலகளவில் இந்த பிரச்சினை அதிகரிக்கும்.
- இந்தாண்டு ராகு - கேது பெயர்ச்சியும், குரு பெயர்ச்சி என முக்கியத்துவம் வாய்ந்த இரு பெரிய கிரக பெயர்ச்சி நிகழும். ஆனால் சனி பெயர்ச்சி இந்தாண்டு கிடையாது.
- இந்தாண்டு இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகண நிகழ்வும் நிகழ உள்ளது.
-
தொழில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US