புதிய நோய் பரவல் முதல் தங்க விலை உச்சம் வரை.., தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் கூற்று
புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14ஆம் திகதி முதல் 2026 ஏப்ரல் 13ஆம் திகதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார்.
பஞ்சாங்கத்தின் கூற்று..,
மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும்.
அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும்.
மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும்.
நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.
இரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும்.
இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும்.
அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும்.
ரியல் எஸ்டேட் துறை பின்னடையும்.
உலக அளவில் புதிய நோய் தாக்குதல் வரலாம்.
வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கடும் பாதிப்பு ஏற்படும்.
மின்சார கட்டணம் உயரும்.
பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும்.
எல்லையில் பதற்றம் இருக்கும். உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும்.
உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும்.
அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பஞ்சாங்க வாசிப்பில், நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |