ஐபோன், ஐபேட் உள்ளவர்களுக்கு ஒர் எச்சரிக்கை! உடனே இதை செய்யுங்க
ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th Gen ஐபேட், ஐபேட் மினி 4 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ்-இன் IOMobileFrameBuffer-இல் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழையை கொண்டு ஹேக்கர் பயனரின் சாதனத்தை இயக்க முடியும்.
மேலும் இந்த பிழை வேகமாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், இந்திய பயனர்கள் உடனடியாக செக்யூரிட்டி பேட்ச் இன்ஸ்டால் செய்ய CERT-In அறிவுறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.