இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரோஹித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா- இலங்கை இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அடுத்த மாதம் இலங்கை எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
விராட் கோலி கேப்டன் பதிவில் இருந்து விலகிய பிறகு இந்திய வீரர் ரஹானே இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டார்.
ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர் ரன் குவிக்க தவறியதை அடுத்து ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த அணியில் மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அணிகளின் மொத்த விவரம்: 1.ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணை கேப்டன்), 3. மயங்க் அகர்வால் 4. பிரியங் பஞ்சல் 5. விராட் கோலி 6. ஷ்ரேயாஸ் அய்யர் 7. ஹனுமன் விஹாரி 8. சுப்மன் கில் 9. ரிஷ்ப் பண்ட் 10. அஸ்வின் 11. ஜடேஜா 12. ஜெய்ன்ட் யாதவ் 13. குல்தீப் யாதவ் 14. முகமது சமி 15. சிராஜ் 16. உமேஷ் யாதவ் 17. சவுரப் குமார் 18.கேஎஸ் பரத்.