சைதை துரைசாமியின் மகன் மாயம்: ஹிமாச்சல் ஆற்றில் கார் விழுந்து விபத்து
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கார் விபத்து
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருந்த போது அவரது இன்னோவா கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஆற்று நீரில் மூழ்கிய காரில் இருந்து கார் ஒட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுடன் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன வெற்றி துரைசாமி
சட்லஜ் ஆற்றில் நடந்த இந்த விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமாகியுள்ளார்.
அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bccl
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
tamil news, saidai duraisamy son vetri missing at HimachalPradesh car accident, saidaiduraisamy, vetri duraisamy missing,