லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்?

Tamils United States of America Los Angeles Indian Origin
By Karthikraja Jun 08, 2026 12:15 PM GMT
Report

தமிழ் வம்சாவளியான நித்யா ராமன் லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் வேட்பாளருக்கான தேர்தலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் தேர்தல்

அமெரிக்காவின் முக்கிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸில் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான கட்சி சார்பற்ற முதல் 2 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முதன்மைத் தேர்தல் ஜூன் 2 ஆம் திகதி அன்று நடைபெற்றது.

இதில், 80% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 72 வயதான கரேன் பாஸ், 34.7 சதவீத வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்? | Tamil Origin Nitya Raman In Los Angeles Mayor Race

3வது இடத்தில் இருந்த இந்திய வம்சாவளியான நித்யா ராமன், ரியாலிட்டி டிவி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை முந்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்? | Tamil Origin Nitya Raman In Los Angeles Mayor Race

Spencer Pratt 193,085 வாக்குகள்(26.7%) பெற்று 3வது இடத்தில் உள்ள நிலையில், Nithya Raman 196,198 வாக்குகளுடன்(27.1%) 2வது இடத்தில் உள்ளார். 

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்? | Tamil Origin Nitya Raman In Los Angeles Mayor Race

இன்னும் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் தேர்தலில் 2 ஆம் இடம் வரும் நித்யா ராமன் அல்லது ஸ்பென்சர் பிராட், ஏறக்குறையை தனது வாய்ப்பை உறுதிசெய்துள்ள கரேன் பாஸை எதிர்கொள்ள உள்ளனர்.

நித்யா ராமன்

1981 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த நித்யா ராமன், தனது 6 வயதிலே பெற்றோருடன் அமெரிக்காவின் லூசியானாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். 

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்? | Tamil Origin Nitya Raman In Los Angeles Mayor Race

அங்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாட்டில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் எம்ஐடியில் நகர்ப்புற திட்டமிடலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி, நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் டிரான்ஸ்பரண்ட் சென்னை என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.

பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று, வீடற்றவர்களுக்கு வீடுகளை கட்டி தரும் SELAH என்ற லாபநோக்கற்ற அமைப்பை நிறுவினார்.

2020 மற்றும் 2024 லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயர் போட்டியில் தமிழ் வம்சாவளி பெண் - யார் இந்த நித்யா ராமன்? | Tamil Origin Nitya Raman In Los Angeles Mayor Race

தனது பதவி காலத்தில், வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டார். மேலும், லாஸ் ஏஞ்செல்ஸ் நகர திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்தார்.

நித்யா ராமன், சக ஹார்வர்ட் முன்னாள் மாணவரான தொலைக்காட்சி திரைக்கதை எழுத்தாளர் வாலி சந்திரசேகரனை திருமணம் செய்துள்ளது. இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US