இங்கிலாந்தில் திடீரென நிலைகுலைந்து சரிந்த கர்ப்பிணி: வெளியாகியுள்ள துயரச் செய்தி
இங்கிலாந்தில், இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்துகொண்டிருந்த பெண்ணொருவர் திடீரென நிலைகுலைந்து சரிந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
திடீரென நிலைகுலைந்து சரிந்த கர்ப்பிணி

இங்கிலாந்தின் Merseyside என்னுமிடத்திலுள்ள Kirkby என்னும் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்துள்ளார் கலைவாணி பாலகிருஷ்ணன் (41).
கர்ப்பமாக இருந்த கலைவாணி கருவில் இரட்டைக் குழந்தைகளை சுமந்துகொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 11.00 மணியளவில் நிலைகுலைந்து சரிந்துள்ளார் கலைவாணி.
உடனடியாக அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார் கலைவாணி.
அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படாத நிலையில், அவரது கணவர் மலேசியாவில் வாழ்வதாகவும், கலைவாணியின் உடல் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |