SA20 தொடரில் கலக்கும் தமிழ் வம்சாவளி பிரெனலன் சுப்ராயன் - வைரலாகும் ஓம் சரவண பவ டாட்டூ
SA20 தொடரில் கலக்கி வரும் தமிழ் வம்சாவளி வீரர் பிரெனலன் சுப்ராயனின் கையில் உள்ள டாட்டூ வைரலாகி வருகிறது.
பிரெனலன் சுப்ராயன்
தென்னாப்பிரிக்காவில், SA20 தொடர் டிசம்பர் 26 ஆம் திகதி தொடங்கி 2026 ஜனவரி 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

நேற்றைய போட்டியில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (JSK) மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் (DSG) அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாட்டம் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், 17.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, வெறும் 86 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. DSG தரப்பில், அதிகபட்சமாக அணித்தலைவர் மார்க்ரம், 22 ஓட்டங்கள் குவித்தார்.

87 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், 12.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து, 88 ஓட்டங்கள் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓம் சரவண பவ டாட்டூ
4 ஓவர்கள் வீசி, முதல் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் பிரெனலன் சுப்ரயன், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

32 வயதான பிரெனலன் சுப்ரயன், டர்பனில் பிறந்த தமிழ் வம்சாவளி ஆவார். வெருலம் கிரிக்கெட் கிளப்பில், ஏற்கனவே அவரது தந்தை மற்றும் தாத்தா கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அவர் கையில், ஓம் சரவண பவ என எழுதி, வேல் படம் உள்ள டாட்டூ வரைந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |