ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழ் திருநங்கை எம்.பி - யார் இந்த கியூ மணிவண்ணன்?

Tamil nadu Scotland Transgender
By Karthikraja May 11, 2026 09:11 AM GMT
Report

ஸ்காட்லாந்தில் நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கையாக எம்.பியாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.

ஸ்காட்லாந்தில் தமிழ் திருநங்கை எம்.பி

ஸ்காட்லாந்தில் குறுகிய கால மாணவர் விசாக்கள் உட்பட, செல்லுபடியாகும் எந்தவொரு விடுப்பு உரிமையையும் கொண்ட பிரித்தானியா அல்லாத குடிமக்கள் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கும் சட்டம் கடந்த 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம், அங்கு குடியுரிமை இல்லாமல் வசித்து வரும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட கியூ.மணிவண்ணன்(Q Manivannan) என்பவர் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிந்தது. 

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழ் திருநங்கை எம்.பி - யார் இந்த கியூ மணிவண்ணன்? | Tamil Origin Trans Q Manivannan Become Scotish Mp

கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்காட்டிஷ் கிரீன்ஸ் கட்சி சார்பில் எடின்பர்க், லோதியன்ஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை கியூ.மணிவண்ணன் பெற்றுள்ளார்.

தன்னை ஒரு பாலினமற்றவராக அடையாளப்படுத்திக்கொள்ளும் கியூ மணிவண்ணன் 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார்.

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவராக உள்ள இவர், டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சர்வதேச அமைதி ஆய்வுகளில் எம்ஃபில் பட்டம், டெல்லியில் உள்ள ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மானுடவியல் பயின்றுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பேசிய கியூ மணிவண்ணன், என் பெயர் டாக்டர் கியூ மணிவண்ணன், நான் ஒரு திருநங்கை தமிழ் குடியேறி. இந்த நாட்டில் உள்ள சிலருக்கு, வெறுப்பாளர்கள் வெறுக்கும் அனைத்தும் நான்தான். 

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழ் திருநங்கை எம்.பி - யார் இந்த கியூ மணிவண்ணன்? | Tamil Origin Trans Q Manivannan Become Scotish Mp

மேலும் உங்கள் மாநிலக் கட்சி உறுப்பினராக நான் இப்போது கவனத்துடன் இங்கு நிற்கிறேன். அக்கறையுள்ள அரசியல், பின்தங்கியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது ஒருபோதும் உள்ளே அழைக்கப்படாதவர்கள் என அனைவருக்கும் சாத்தியமானவற்றை விரிவுபடுத்துகிறது." என தெரிவித்துள்ளார். 

குடியுரிமை இல்லாத வெளிநாட்டவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட கூடாது என அரசியல் கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US