அமெரிக்காவில் மாகாண ஆளுநர் தேர்தலில் வேட்பாளராகியுள்ள தமிழர் விவேக் ராமசாமி
ஓஹியோ மாகாண ஆளுநருக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக விவேக் ராமசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விவேக் ராமசாமி
அமெரிக்காவின் ஓஹியோவின் சின்சினாட்டி நகரில் பிறந்தவர் 40 வயதான விவேக் ராமசாமி.

இவரின் பெற்றோர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தமிழர்கள் ஆவார்கள்.
2014 ஆம் ஆண்டில் ரோய்வண்ட் அறிவியல்கள் எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைத் துவக்கி நடத்தி, பின்னர் அதனை பெருந்தொகைக்கு விற்பனை செய்தார்.
2024 குடியரசுக் கட்சிக்கான ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் போட்டியிட்டார். அதன் பின்னர் போட்டியில் இருந்து விலகி ட்ரம்ப்பை ஆதரித்தார்.

தற்போது ஓஹியோ மாகாண ஆளுநர் குடியரசு கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டார்.
அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப், எலான் மஸ்க் ஆகியோர் விவேக் ராமசாமிக்கு முழு ஆதரவை வழங்கினர்.

நேற்று நடைபெற்ற போட்டியில், குடியரசு கட்சியின் மற்றொரு வேட்பாளர் கேசி புட்ஷை தோற்கடித்துள்ளார்.
அடுத்து நடைபெற உள்ள மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஏமி ஆக்டனை எதிர்த்துப் போட்டியிட உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |