நேபாளத்தில் 5 பெண்கள் உட்பட ஏழு தமிழர்கள் பலி: ஆன்மீக சுற்றுலாவின்போது துயரம்
நேபாளத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களில் 7 பேர் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர்.
நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா
தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேர் ஆன்மீக சுற்றுலாவிற்காக நேபாள நாட்டிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் சித்வான் மாவட்டத்தில் உள்ள மனோக்காம் பகுதியில் கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு 14 பேர் ஒரு சிறிய ரக பேருந்திலும், 10 பேர் மற்றொரு சிறிய ரக பேருந்திலும் பயணித்துள்ளனர்.
அவற்றில் 14 பேர் பயணித்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
5 பேர் பெண்கள்
இதனையடுத்து மீட்புப் பணிகள் நள்ளிரவு வரையில் தொடர்ந்து நடைபெற்றன. காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் 5 பேர் பெண்கள் என்று கூறப்பட்டுள்ளது.
விபத்திற்கான பிற சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |