தேவாவின் ஆஸ்தான பின்னணி பாடகர் கிருஷ்ணா ராஜ் காலமானார்
tamil playback singer krishnaraj passed away: இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பின்னணி பாடகர் கிருஷ்ணா ராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
பாடகர் கிருஷ்ணா ராஜ் காலமானார்
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 74 வயதான கிருஷ்ணா ராஜ், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் ஆவார்.

'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'காத்து அடிக்குது', 'சிரிச்சுட்டு போனாலும்', 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'நாட்டாமை பாதம் பட்டா' உள்ளிட்ட பல பிரபலமான பாடல்கள் உட்பட 3,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் 'நாலு நிமிஷம்' என்ற பாடலைப் பாடியிருந்தார்.
தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல், முன்னாள் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் செல்லப்பன் இராமநாதனின் பாராட்டை பெற்றதோடு, அவரின் இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்பட்டது.
இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் உருவான பல்வேறு வெற்றிப் படங்களில் பல முக்கியப் பாடல்களை பாடி, அவரின் ஆஸ்தான பாடகராக இருந்தார்.
இந்நிலையில், பாடகர் கிருஷ்ணா ராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
இவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காகச் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அக்டோபர் 17 ஆம் திகதி தேவாவின் சகோதரர் சபேசனின் மகன் நடிகர் கார்த்திக் சபேசன் காலமானார்.
இந்நிலையில், இன்று தேவாவின் ஆஸ்தான பாடகரான கிருஷ்ணா ராஜ் காலமானது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.