அதன் சுவை இன்னும் இனிக்கும்! என்னை பெரிதும் கவர்ந்த விடயம்... தமிழக வீரர் நடராஜன் பெருமிதத்துடன் வெளியிட்ட பதிவு
இந்திய அணியின் மறக்க முடியாத ஒருநாள் தொடர் வெற்றியில் தனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி என நடராஜன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசியது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இதையடுத்து நடராஜனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவித்துள்ளது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் நடராஜன், கிரிக்கெட் ஒரு அருமையான விளையாட்டு. இந்திய அணியின் மறக்க முடியாத ஒருநாள் தொடர் வெற்றியில் எனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி.
இந்திய அணியின் டிரசிங் ரூமில் நிலவும் சகோதரத்துவம், கடைசி வரை நம்பிக்கை இழக்காத உறுதி, என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு அங்குலமும் போராடி வெற்றி பெறும் போது அதன் சுவை இன்னும் இனிக்கும். ஆதரவு நல்கிய ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.