4 முக்கிய கிரகங்களின் இடமாற்றம்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்!
மே 2022 மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில், 4 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.
இது தவிர இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் இந்த மாதம் நிகழவுள்ளது.
இந்த அடிப்படையில், இந்த மாற்றங்கள் அனைத்தும் 5 ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களைக் கொண்டுவரும்.
அந்தவகையில் மே மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகுந்த மகிழ்ச்சியைத் தரப் போகிறது. தடைப்பட்டிருந்த முக்கியமான வேலைகள் அனைத்தும் இந்த மாதம் மிக வேகமாக நடந்து முடியும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வருமானம் பெரிய அளவில் உயர வாய்ப்பு உள்ளது.
ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காதல் நுழையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் நண்பர்களால் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம், அதாவது மே மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்கள் பெரிய ஆதாயங்களைப் பெறுவார்கள். இதுவரை இருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.
தொழில் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருந்துவந்த தடைகள் நீங்கும். பலதரப்பட்ட மனிதர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களது அறிமுகத்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் நடக்கும் கிரகப் பெயர்ச்சி அவர்களின் தொழிலுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக நினைத்திருந்த புதிய வேலையையும் இப்போது தொடங்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக மாற்றம் தொழிலில் சிறப்பான பலன்களைத் தரும். அவர்கள் பெரிய சாதனைகளை செய்து முடிப்பார்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும்.
குறிப்பாக வெளிநாடு செல்லும் கனவில் இருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டு பயணத்தால் பல ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் ரீதியாகவும் மற்ற ஊர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மே மாதம் அவர்களின் தொழிலில் பெரிய அனுகூலத்தைத் தரும். அதிகப்படியான முன்னேற்றம் கிடைக்கும். மீன ராசிக்காரர்களின் வருமானமும் அதிகரிக்கும். விரும்பிய வேலையைப் பெறலாம். இடமாற்றம் பெற விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மொத்தத்தில் மீன ராசிக்கரர்களுக்கு மே மாதம் மிக அற்புதமாக இருக்கும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021