ஆணுறுப்பில் வெளியேறும் மாதவிடாய், விந்து- வேதனையில் தமிழ் நடிகர்
தமிழகத்தில் முதல் இடைபாலினத்தவராக அடையாள அட்டையைப் பெற்ற தமிழ் சீரியல் நடிகர் சக்கரவர்த்தி, தான் மீளா துயரத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
முதல் இடைபாலினம்
சின்னத்திரை நடிகர், தொகுப்பாளர், பின்னணிக்குரல் கலைஞர் என பன்முகம் கொண்டவர் சக்கரவர்த்தி.
தற்போது இவர் தமிழகத்தில் முதல் நபராக இடைபாலினம் அடையாள அட்டையை பெற்றுள்ளார்.
இதற்கு காரணம் ஆணாக பிறந்த இவர் கர்ப்பப்பையை கொண்டிருந்தார். அத்துடன் தனது பிறப்புறுப்பில் மாதவிடாய், விந்து வெளியேறுவதால் கடுமையான வேதனையையும் அனுபவித்து வந்தார்.
சக்கரவர்த்தி 10 வயதை கடந்தபோது ஆணுறுப்பு வழியாக மாதவிடாய் வெளியேறுவதை கண்டு பயந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 11 வயதில் விந்து வெளியேறியுள்ளது. அதன் பின்னர் மருத்துவரை நாடியபோது தான் கர்ப்பப்பை உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் பள்ளியில் சக மாணவர்களுக்கு தெரிய வர, சக்கரவர்த்தி கேலிக்கு ஆளாகியுள்ளார். அதனால் படிப்பையும் பாதியில் விட்டுவிட்டார்.
தற்கொலை முயற்சி
ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற சக்கரவர்த்தியை அவரது தாய் தடுத்து தைரியம் கொடுத்துள்ளார். அவரின் அறிவுரையின் பேரில் தொகுப்பாளர், நடிகர், பின்னணிக்குரல் கலைஞர் என பன்முகத் திறமை கொண்டவராக உருவெடுத்துள்ளார்.
தனது 38வது வயதில் தான் ஒரு இடைபாலினம் என்பதை சக்கரவர்த்தி அறிந்துகொண்டுள்ளார். இந்த வலியில் இருந்து தப்பிக்க கர்ப்பப்பையை எடுக்க முடிவு செய்து அகற்றியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பிரச்சனை நிற்கவில்லை.
ஆணுறுப்பு அகற்றம்
வலியும், உடல் நோயும் அதிகரித்ததால், புற்றுநோய் ஏற்படாமல் இருக்க தனது ஆணுறுப்பையும் அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சக்கரவர்த்தி தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை இடைபாலினம் என பொதுவெளியில் வெளிப்படுத்தியதால் சீரியல் வாய்ப்பு உள்ளிட்ட வேலைகளை இழந்து போராடி வருகிறார்.
தனக்கு அரசு உதவ வேண்டும் எனவும், தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் சக்கரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் மீண்டு வந்தால் தன்னால் முடிந்த சேவையை செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |