தொழிலதிபரால் கொடுமைகளை சந்தித்த நடிகை: விவாகரத்து போட்டோ ஷூட்டில் குதூகலம்
துபாய் தொழில் அதிபரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை விவாகரத்துக்கு பின்பு, எடுக்கப்பட்ட போட்டோ ஷீட் சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது திருமணம்
சென்னையை சேர்ந்த சின்னதிரை நடிகை ஷாலினி, ஜீ தமிழில் வெளியான முள்ளும் மலரும் தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு நடித்துக் கொண்டிருந்தார்.
@instagram
இதனை தொடர்ந்து சின்னதிரையில் நடிக்க வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் துபாய்க்கு நடனமாட சென்றுள்ளார். அங்கு ரியாஸ் என்ற தொழிலதிபர் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார்,.
கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட அவருக்கும், ஷாலினிக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்பு துபாயிலும், சென்னையிலும் ஷாலினியுடன் ரியாஸ் வாழ்ந்து வந்துள்ளார்.
தொழில் அதிபரின் சித்ரவதை
திருமணமாகி சில ஆண்டுக்கு பின் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் ரியாஸ், ஷாலினியை அடித்து கொடுமைப்படுத்தியதோடு, காரில் செல்லும் போது நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.
@instagram
மேலும் பலவகையில் அவரை கொடுமைப்படுத்தியதால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வருவதை குறைத்து கொண்ட ரியாஸை காண ஷாலினி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ரியாஸிற்கு ஏற்கனவே இன்னொரு பெண்ணோடு முன்னர் திருமணமானது தெரியவந்துள்ளது. மேலும் அவரை விவாகரத்து செய்யாமலே ஷாலினியை திருமணம் செய்துள்ளார்.
வினோத போட்டோ ஷீட்
இதனை தொடர்ந்து துபாய் சென்ற நிவாஸ் இன்னொரு மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி கணவரை பிரிந்து விட்டதை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், வினோதமான விவாகரத்து போட்டோ ஷீட் நடத்தியுள்ளார்.
@instagram
தன்னை கொடுமைப்படுத்திய கணவரின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்தும், புகைப்படத்தை கிழித்தும், மது அருந்துவது போன்றும் புகைப்படங்கள் எடுத்து ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெறும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.