என்னை தொட்டவனை துரத்திப்பிடித்து செருப்பால் அடித்தேன்! ஆவேசமாக கூறிய நடிகை
சமூகத்தின் பார்வையில் நடிகை மீதான தவறான எண்ணம் மாற வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயலட்சுமி
சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. கேரளாவைச் சேர்ந்த இவர் வேட்டைக்காரன், மாயாண்டி குடும்பத்தார், குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பாஜக கட்சியில் உறுப்பினராக இருக்கும் இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், தன்னிடம் அத்துமீறிய நபர் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், 'இன்று நான் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் அதன்பின் பல வலிகள் இருக்கின்றன. பிரபல இயக்குநர் ஒருவர் 14 நாட்கள் படப்பிடிப்பில் எனக்கு ஒரு சீன் கூட நடிக்க வாய்ப்பு தராமல் இருந்தார். அதன் பின்னர் தான் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த இயக்குநர் என்னிடம் அப்படி நடந்துகொண்டார் என்பதை புரிந்து கொண்டேன்' என்றார்.
துரத்திப்பிடித்து அடித்தேன்
மேலும் அவர், 'அனைத்து துறைகளிலும் இருப்பது போல் தான் சினிமா துறையிலும் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. உங்களிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், உடனே அது தப்பு என்று கூறுங்கள்.
அப்போது தான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார். ஒருமுறை பூங்காவில் என்னை ஒருவன் தவறான இடத்தில் தொட்டான். நான் அவனை துரத்திப்பிடித்து செருப்பால் அடித்தேன். அப்போது தான், அவன் மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டான்.
என்னதான் நல்ல நடிகையாக இருந்தாலும், சமுதாயத்தின் பார்வையில் நடிகையின் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |