ஐபிஎல் ஏலத்தில் தமிழன் ஷாருக்கானுக்கு அடித்த அதிர்ஷ்டம்! 5 கோடிக்கு மேல் எடுத்த அணி: பேருந்தில் நடந்த சுவாரஸ்ய காட்சி
ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டதால், தமிழ்நாடு வீரர்கள் துள்ளிக் குதிக்கும் வீடியோ காட்சியை தினேஷ் கார்த்திக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான 14-வது ஐபிஎல் தொடர் வரும் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த சில வீரர்கள் குறிப்பிட்ட தொகைக்கு எடுக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவரும், தமிழக வீரருமான ஷாருக்கானின் அடிப்படை விலை 20 லட்சமாக இருந்தது.
Turn up the volume and listen to the team's happiness for our bright ⭐#IPLAuction pic.twitter.com/wkDfFbqGGP
— DK (@DineshKarthik) February 18, 2021
ஆனால், அவரை பஞ்சாப் அணி 5.25 கோடிக்கு வாங்கியது. இதை ப்ரீத்தி ஜிந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் ஷாருக்கானையே வாங்கிவிட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக அணியின் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வருபவருமான தினேஷ் கார்த்திக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டி போடும் போது, வீரர்கள் துள்ளிக் குதிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.