ஸ்மார்ட் போனில் தங்களை ஏலம் விடும் இளம் பெண்கள்! கிளப் ஹவுஸ் ஆப்பில் நடக்கும் விபரீத விளையாட்டு: எச்சரிக்கை தகவல்
தமிழகத்தில் கிளப் அவுஸ் ஆப்பில் நடக்கும் சில கொடுமைகளின் ஆடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில், தினந்தோறும் ஏதேனும் ஒரு புதிய ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் வகையில் ஆப்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
அதிலும், குறிப்பாக இப்போது இருக்கும் இருக்கும் இளசுகளை எப்படி இழுக்கலாம் என்று, அதற்கு ஏற்ற வகையில் பல ஆப்களும் வருவதுண்டும். நல்ல முறையில் பயன்படுத்தும் வகையில், அந்த ஆப் இருந்தால், கூட அதை தவறாக பயன்படுத்தும் பலரும் இந்த காலத்தில் உண்டு.
அந்த வகையில், தற்போது ஆன் லைன் கல்விக்காக அதிக அளவு பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் கிளப் ஹவுஸ் என்ற ஆப் பிரபலமாகி வருகிறது.
இதில், தெரிந்த மற்றும் தெரியாத ஆண் மற்றும் பெண்களிடம் நாம் பேசிக் கொள்ளலாம், நட்பை வளர்த்துக் கொள்ளலாம். இதை பயனுடையதாக மாற்றாமல், இதை இளசுகள் பலர் அபத்ததனமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது பெண்கள் ஏலம் தான். இந்த கிளப் ஹவுஸில் பதின்பருவ இளைஞர்களும், இளம் பெண்களும் நிறைந்துள்ள ஒரு குழுவில் பெண்களுக்கு ஒரு விலை நிர்ணயித்து ஏலம் நடத்தப்படுகிறது.
இந்த குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் புகைப்படத்தை வைத்து ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அந்த குழுவில் உள்ள மற்ற ஆண்கள் அந்த பெண்ணை கூடுதல் தொகை குறிப்பிட்டு ஏலம் கேட்கின்றனர்.
இறுதியில் அந்த பெண்ணுக்கு என்ன விலை நிர்ணயிக்கப்படுகிறதோ அது தான் அந்த பெண்ணின் மதிப்பு என்று கூறி இழிவுபடுத்துகின்றனர். இதில் பங்கேற்கும் பெண்களும் பொழுது போக்கு என்று நினைத்து, முன் அறிமுகமில்லா ஆண்களிடம் தங்களது அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
சில பெண்கள் தாங்களாக முன்வந்து தங்களுக்கு என்ன ரேட் தருவார்கள்? என்று சாதரணமாக கேட்கின்றனர். இது ஆரம்பத்தில் இப்படி தான் இருக்கும், போக போக இது விபரீதமாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.
இதனால் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் ஸ்மார்ட்போனை சரியாக பயன்படுத்திகிறாரா? என்பதை அடிக்க பார்த்துக் கொள்வது நல்லது.