எதுவுமே பண்ணலன்னு ஆவேசமான பொதுமக்கள்., பாதியிலேயே திரும்பிய தமிழச்சி தங்கபாண்டியன்
பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பொதுமக்கள் முழக்கமிட்டதால் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பாதியிலேயே திரும்பி சென்றார்.
தென்சென்னை வேட்பாளர்
தென்சென்னை மக்களவை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசப்பட்டு வந்த நிலையில் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்நிலையில், இன்று காலை தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூரில் திமுகவினருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாரதிதாசன் நகர் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றார்.
பொதுமக்கள் முற்றுகை
அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் தமிழச்சி தங்கபாண்டியனின் வாகனத்தை முற்றுகையிட்டு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்க தொடங்கினர்.
அவர்கள், தங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகள் மோசமாக பாதிப்படைந்துள்ளதாகவும், தங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கேட்டனர்.
மேலும், எங்களது பகுதிக்கு யாரும் வரவில்லை என்றும், எந்த வசதிகளையும் செய்து தரவில்லை என்றும் முழக்கமிட்டு வாகனத்தை மறித்தனர்.
அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் சமாதானப்படுத்தியும் பொதுமக்கள் முழக்கமிட்டவாறே இருந்தனர். இதனால் பிரச்சாரம் செய்யாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |