திமுகவை சேர்ந்த பிரபல முகம் தமிழன் பிரசன்னாவின் 35 வயதான மனைவி தற்கொலை! விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள்
வழக்கறிஞரும், திமுகவில் செய்தி தொடர்பு பிரிவின் மாநில இணைச் செயலாளராக இருப்பவருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழன் பிரசன்னா சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் நதியா (35) என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
பிரசன்னாவின் மனைவி நதியாவிற்கு இன்று பிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது. இதனால், தன் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் போட வேண்டும் என்று நதியா பிரசன்னாவிடம் கூறியுள்ளார்.
இந்த கொரோனா கால கட்டத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று பிரசன்னா மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் கோபமடைந்த நதியா தன்னிடம் சண்டை போட்டு கொண்டு நேற்றிரவு முதல் மன விரக்தியில் இருந்து வந்தார். இன்று காலை 10 மணியளவில் எழுந்து பார்த்த போது அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக தமிழன் பிரசன்னா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
நதியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய பொலிசார் தமிழன் பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.