விஜய் முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை எதிர்ப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் தவெக - திமுக இடையேதான் போட்டி என கூறியதை தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில் விஜய்யின் பேச்சை விமர்சித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். அவர் கூறுகையில்,
"விஜய்யின் பேச்சு எதுகை, மோனைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். முதலில் திமுக எதிர்ப்பை அவர் தீவிரப்படுத்த வேண்டும். அவரது படம் தெலுங்கில் டப்பிங் ஆகிறது. பிற மாநிலங்களில் ஓகோ என ஓடுகிறது. படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா..? களத்தில் விஜய் எதிரில் இல்லை. விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |