வாக்கிங் சென்ற முதல்வரை வழிமறைத்து பெண் கேட்ட கேள்வி! வெக்கத்தில் தலைகுனிந்த ஸ்டாலின்.. சுவாரஸ்ய சம்பவம்
காலையில் வாக்கிங் சென்ற தமிழக முதல்வரை, பெண் ஒருவர் வழி மறைத்து கேட்ட கேள்வி பலரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் மீது அதிகம் அக்கறை கொண்டவர். இதன் காரணமாகவே காலையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது, சைக்கிளிங் போன்றவை செய்து உடலை பிட்னஸாக வைத்து கொள்வார்.
அது போல நேரம் கிடைக்கும் போது ஸ்டாலின் ஜிம்மிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை அவர், சென்னை தியோசபிக்கல் சொசைட்டி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
M K Stalin blushes as a lady asks the secret of his youthful look, during his morning walk. He responds "diet control". pic.twitter.com/178TnzrNxE
— J Sam Daniel Stalin (@jsamdaniel) September 21, 2021
அப்போது அவரை சந்தித்த சிலர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வரிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்க அதற்கு அவரும் இயல்பாக பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்து உள்ளது.
குறிப்பாக, பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்களை விமான நிலையத்தில் பார்த்ததாகவும் அப்போது உங்களிடம் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறியிருந்தேன்.
அதுபோலவே நீங்களும் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுத்து வருவதாக கூறினார். அப்போது கடைசியில் நீங்கள் எப்படி வயதானாலும் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் சிரித்து கொண்டே உடல் பயிற்சி தான் காரணம் என்று கூறினார்.