நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு! முழு விபரம்: உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, திமுக கட்சி கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இருந்தது.
இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தொடர்ந்து தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில் சற்று முன்பு, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
31.03.2021 வரை கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்கு உட்பட்டு கடன் வாங்கியவர்களின் கடனை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. - @mkstalin #Tngovt pic.twitter.com/fT84QJiSsk
— Santhana Kumar (@sandy_twitz) November 1, 2021
சுமார் இதன் மூலம் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், இதனால் நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் நகைக்கடன் அடகு வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.