துபாய் லொட்டரியில் ரூ.2.35 கோடி வென்ற திருநெல்வேலிக்காரர்
துபாயில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.2.35 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
ரூ.2.35 கோடி பரிசுத்தொகை
தமிழக மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்தவர் பீர் முகம்மது ஆதம் (வயது 41) (Peer Muhammad Azam). இவர், துபாயில் உள்ள பொது நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு, துபாய் லாட்டரியில் 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2.35 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், " கடந்த 2017-ம் ஆண்டு முதல் நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி மற்றும் 4 வயது மகள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.
நான் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் இந்திய, பாகிஸ்தானிய நண்பர்கள் என மொத்தம் 20 பேர் சேர்ந்து மாதம்தோறும் லொட்டரி டிக்கெட் வாங்குவோம். இந்த முறை எனது பெயரில் வாங்கி லொட்டரி குலுக்கலில் கலந்து கொன்டோம்.
நாங்கள் கூட்டாக 20 டிக்கெட்டுகளை வாங்க பணம் சேர்த்தோம். மேலும் UAE லாட்டரியில் எனது கணக்கின் கீழ் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் எண்களைத் தேர்ந்தெடுத்தேன்.
டிக்கெட் எண்களில் ஒன்று வெற்றி பெற்ற எண்களுடன் பொருந்தியது. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. 10 லட்சம் திர்ஹாம் பரிசுத்தொகை எனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளித்துள்ளேன்.
நாங்கள் வெற்றி பெற்றதை அறிந்ததும் என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதனை வைத்து என்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும். இதில் ஒரு பகுதியை தொண்டுக்கு வழங்குவேன்.ஆனால் பரிசுத் தொகையை என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |