கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன்! கர்ஜித்த சீமான்.. அமைச்சர் சேகர்பாபு பதிலடி
பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
பேனா வடிவ நினைவுச்சின்னம்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது?"
சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு
கடலுக்குள் பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன் என்றார். சீமானின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெப்பினர்.
அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, எங்கள் கை பூ பறிச்சிக்கிட்டு இருக்குமா? என்றார். மேலும், சீமானுக்கு இந்த பதிலே போதும் என்றும் அவர் தெரிவித்தார்.