நீலகிரியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து: 8 பேர் வரை உயிரிழப்பு
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
தமிழ்நாட்டில் சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்தின் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையிலான சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுற்றுலா பேருந்தானது 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி தீவிரம்
மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த 20 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் விபத்தில் சிக்கிய மீதி பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்க்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |