இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்- தமிழக அரசு பெருமிதம்
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்
டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளை பதிவு செய்வதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு பாராட்டி முதல்பரிசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 மாதங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஏழை, எளிய மக்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 666 நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், 40 மாதங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் புயலால் பாதித்த போது, 6 லட்சத்து 36 ஆயிரத்து 971 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு 359 கோடி ரூபாய் மதிப்பில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு புதிய பல திட்டங்களை தந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சாதனைகளை செய்து வருவதாகவும் தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |