ஒரு நிமிடத்தில் 2,00,000 விதைப்பந்துகள்! சாதனை படைத்த பள்ளி மாணவிகள்
பாளையங்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவிகள் ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 5000 மாணவிகள் சேர்ந்து மரக்கன்றுகள் உருவாக்குவதற்காக விதைப்பந்துகள் உருவாக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஒரு மாணவி ஒரு மரம் என தலைக்கு 10 விதைப்பந்துகள் என்ற கணக்குடன் ஒரு கோடி மரம் நடும் திட்டத்துடன் செயல்பட உள்ளது.
5000 மாணவிகள் , 10,000 கைகள், ஒரு மாணவி 10 விதைப்பந்துகள் என்று ஒரு நிமிடத்தில் 2 லட்சம் விதைகளை பந்துகளாக உருவாக்கும் உலக சாதனையை மாணவிகள் ஒரு நிமிடத்தில் செய்து ஆச்சரியப்படுத்தினார்கள்.
இவ்விதைப்பந்தில் களிமண் மற்றும் வேம்பு, கொய்யா, பலா, நாவல், புளி உள்ளிட்ட மரவிதைகளை வைத்து மாணவிகள் தயார் செய்தனர்.மேலும் இவ்விதை பந்துகளை தாமிரபரணி நதிக்கரையில் இருபுறமும் மாணவிகள் வீசவும், மரக்கன்றுகள் நடவும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |