லண்டன் கால்வாயில் சடலமாக மிதந்த தமிழன்!
லண்டன் பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மகன் ஜீவ்நாத்.
கடந்தாண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி ஜீவ்நாத் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டதாக, இன்று காலை அவரது பெற்றோருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
அந்த மின்னஞ்சலில் ஜீவ்நாத்தின் மரணம் குறித்து எந்தவித முறையான தகவலும் இல்லை.
ஏன் கால்வாய்க்கு சென்றார்? இது விபத்தா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் இந்திய தூதரகம் மற்றும் அரசின் உதவியை நாடியுள்ள பெற்றோர், மகனின் உடலை பெற்றுக்கொள்வதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளனர், இதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |