பணத்தை பிரசாதமாக வழங்கும் கோவில் - தமிழ்நாட்டில் எங்கே தெரியுமா?
பொதுவாக கோவில்களில் சர்க்கரை பொங்கல் போன்றவையே பிரசாதமாக வழங்கப்படும்.
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதமாக நாணயங்கள் வழங்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பணத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்
திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ வரம் தரும் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கருப்பசாமியை அந்த பகுதி மக்கள் காவல்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலில் ஒரு நிகழ்வின் போது, பிரசாதமாக பக்தர்களுக்கு நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த காசை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்வதின் மூலம் எப்பேற்பட்ட கடன் பிரச்னையும் தீரும், செல்வச் செழிப்பும் லட்சுமி கடாட்சமும் பெருகும் என நம்பப்படுகிறது.
Tamil Nadu temple goes viral for giving money as prasad instead of taking donations. pic.twitter.com/8Uud7gNVXv
— ʀᴀᴍ (@ramdevkar07) May 12, 2026
இந்த கோவிலில் பூசாரி சுருட்டு பிடித்துக்கொண்டே பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக கோவில்களில், பக்தர்கள் தான் பூசாரிக்கு காணிக்கை வழங்குவார்கள். இந்த கோவில்களில் அதற்கு மாறாக பூசாரி பக்தர்களுக்கு பணம் வழங்குகிறார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |