என் நிம்மதி போச்சு: ரயில் முன்பு புதுமாப்பிள்ளை பாய்ந்து தற்கொலை - சோகச் சம்பவம்
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் முன்பு புதுமாப்பிள்ளை பாய்ந்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சரவணன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார.
இதனையடுத்து, அப்பெண்ணை காதல் திருமணம் செய்து சென்னையில் வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். ஆனால், இவர்கள் இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன் மன நிம்மதி இல்லாமல் அலைந்தார்.
தொடர்ந்து இருவருக்குள்ளும் சண்டை வந்துக்கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் சரவணன் தன் சொந்த ஊருக்கு திரும்பினார். ஊரில் வந்து தன் பெற்றோர்களிடம், நண்பர்களிடம் மனைவி என்னிடம் சண்டை போட்டு தொந்தரவு செய்வதாக புலம்பி வந்துள்ளார்.
மனஅழுத்தத்திற்கு ஆளான சரவணன், இன்று காலை அம்பாசமுத்திரம் ரயில்வே நிலைய கேட் அருகே வந்தார். அப்போது, அம்பாசமுத்திரம் தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு திடீரென சரவணன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சரவணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |