தமிழகம் TO இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்.., எப்போது இருந்து தெரியுமா?
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
தமிழகம் TO இலங்கை கப்பல் போக்குவரத்து
கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.
பின்னர், வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளை சேர்ந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
நாகையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும்.பின்னர், மறுமார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல் நாகைக்கு வந்தடையும்.
இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் மொத்தம் சாதாரண 133 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் உள்ளன. இதில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வானிலை காரணமாக நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை டிசம்பர் 18ம் திகதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், இந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி பிரச்சனைகள் நடைபெற்று வந்ததால் மீண்டும் தொடங்க தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயணச்சீட்டை www.sailsubham.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடை வரை உடைமைகளை பயணிகள் எடுத்துச் செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |