Forbes-யின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்கள்
புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்து தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகளவில் புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனம் ஃபோர்ப்ஸ். இப்பத்திரிகை உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழர்கள் சிலரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
சுரேஷ் கிருஷ்ணா
சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர் ஆவார். இவரது நிறுவனம் சென்னையை மையமாக கொண்டுள்ளது.
இவர் TVS குழுமத்தின் 3ஆம் தலைமுறை உறுப்பினர் ஆவார். சுரேஷ் கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் (இந்திய மதிப்பில் 9,000 கோடி) டொலர் ஆகும்.
இவரது மகள்கள் தற்போது Sundram Fasteners Limited-யின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேணு ஸ்ரீனிவாசன்
TVS Motor நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசனின் மொத்த சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 26,000 கோடி) ஆகும்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், இந்திய அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் 95வது இடத்தில் உள்ளார்.
கலாநிதி மாறன்
சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறன், இந்திய அளவில் 82வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.22,200 கோடி ஆகும் (3 பில்லியன் டொலர்).
இந்தியா மட்டுமல்லாது 27 நாடுகளில் இவரது தொலைக்காட்சி குழுமம் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்ரீதர் வேம்பு சகோதரர்கள்
Zoho நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் சகோதரர் மற்றும் சகோதரி பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவரின் தங்கை ராதா வேம்பு உலகளவில் பணக்காரர் பட்டியலில், 3.3 பில்லியன் சொத்து மதிப்புடன் 949வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் சேகர் வேம்பு 2.5 பில்லியன் சொத்து மதிப்புடன் (இந்திய மதிப்பில் ரூ.18,500 கோடி) ஆகும். இவர் உலகளவில் 1330வது இடத்தில உள்ளார்.
ஷிவ் நாடார்
HCL Technologies நிறுவனர் ஷிவ் நாடார் (78) 34.6 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 39வது இடத்தில் உள்ளார்.
2008யில் பத்ம பூஷண் விருது பெற்று ஷிவ் நாடார், இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |