இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி... குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்க தேச கேப்டன் தமீம் இக்பால்! ஐசிசி விதித்த அபராதம்
டாக்காவில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக வங்க தேச கேப்டன் தமீம் இக்பாலுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என வங்க தேசத்திடம் இழந்தது.
டாக்காவில் நடந்த கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிப்பெற்றது. வங்க தேச இன்னிங்ஸின் 10வது ஓவரில் கேப்டன் தமீம் இக்பால் பொருத்தமற்ற வார்த்தைகளை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதாக வங்க தேச கேப்டன் தமீம் இக்பால் மீது நடுவார்கள் குற்றம்சாட்டினர்.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட தமீம் இக்பால், போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார்.
இதனால், குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணை தேவையில்லை என ஐசிசி தெரிவித்தது.