டி-20 உலகக் கோப்பையில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்! அவர் சொன்ன நெகிழ வைக்கும் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
2021 டி-20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக வங்க தேச அணியின் தொடக்க ஆட்டகாரர் தமீம் இக்பால் அறிவித்தள்ளார்.
ஐசிசி டி -20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய் சர்வதேச மைதானம், அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானங்களில் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14 வரை போட்டிகள் நடைபெறும்.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டி-20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளன.
இந்தியா உட்பட மற்ற அணிகள் டி-20 உலகக் கோப்பைக்கான அணியை இறுதிச்செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், 2021 டி-20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதாக வங்க தேச அணியின் தொடக்க ஆட்டகாரர் தமீம் இக்பால் அறிவித்தள்ளார்.
டி-20 உலகக் கோப்பையில் இருந்து விலகுவதை உறுப்படுத்திய தமீம் இக்பால், நான் கடந்த 15-16 டி-20 போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பதால், திடீரென வந்து டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மற்ற வீர்களின் இடத்தைப் பிடிப்பது நியாயமாக இருக்காது என கூறியுள்ளார்.
மேலும், இதன் மூலம் நான் டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்த்தமில்லை என தமீம் இக்பால் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தமீம் இக்பாலின் இந்த அறிவிப்பு வங்க தேச ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.