மிரட்டலான ஆட்டம்.. இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய வங்கதேச வீரர்!
சாட்டோகிராமில் நடந்து டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் சதம் விளாசியுள்ளார்.
இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 397 ஓட்டங்ககள் குவித்த நிலையில், வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால்-மஹ்முதுல் ஹசன் ஜாய் இணை, முதல் விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் குவித்தது.
58 ஓட்டங்கள் எடுத்திருந்த மஹ்முதுல்லை, இலங்கையின் அசிதா பெர்னாண்டோ வெளியேற்றினார். எனினும் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிம் இக்பால் 162 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
இது அவருக்கு 10வது டெஸ்ட் சதம் ஆகும். 3வது நாளான இன்று வங்கதேச அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.