101 சிக்ஸர்கள், 8000 ஓட்டங்கள்! 55வது அரைசதம் அடித்து மிரட்டும் வங்கதேச கேப்டன்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச கேப்டன் தமிம் இக்பால் 55வது அரைசதம் அடித்தார்.
ஹராரேவில் நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
வங்கதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒரு சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசி 50 ஓட்டங்கள் எடுத்தார்.
இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 55வது அரைசதம் ஆகும். வங்கதேச கிரிக்கெட்டில் அதிக சதம் மற்றும் அரைசதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தமிம் இக்பால் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல் அதிக சிக்ஸர்கள், அதிக பவுண்டரிகள் விளாசிய வங்கதேச வீரரும் இவர்தான். தமிம் இக்பால் 230 ஒருநாள் போட்டிகளில் 8055 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 14 சதங்கள், 55 பவுண்டரிகள் அடங்கும். மேலும் 101 சிக்ஸர்கள், 887 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
Fifty and gone ☝
— ICC (@ICC) August 7, 2022
Zimbabwe finally have a breakthrough!
Watch all the #ZIMvBAN matches on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?
? Scorecard: https://t.co/HhIuK3Xgwa pic.twitter.com/8EW8d3TyI6