Tandoori Chicken: ஹொட்டல் சுவையில் தந்தூரி சிக்கன்.., இனி வீட்டிலேயே செய்யலாம்
அசைவ ஹொட்டல்களின் ஒரு பிரபலமான உணவு தான் இந்த தந்தூரி சிக்கன்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவையான தந்தூரி சிக்கனை இனி சுலபமாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ¾ kg
- பச்சைமிளகாய் பேஸ்ட்- 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- காஸ்மீரி மிளகாய் தூள்- 2½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி- 2 ஸ்பூன்
- தயிர்- 3 ஸ்பூன்
- சாட் மசாலா- 1 ஸ்பூன்
- சீரக பொடி- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ¼ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் சிக்கனை தந்தூரி செய்வதற்கேற்ப கடைகளில் வாங்கி சுத்தம் செய்து அதன் மேல் கீறல் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பவுலில் பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் சிக்கன் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு பவுலில் காஸ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி, தயிர், சாட் மசாலா, சீரக பொடி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி இலை மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்னர் இதில் ஊறவைத்த சிக்கன் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஓவனிலோ அல்லது எண்ணெய்யிலோ பொறித்து எடுத்து அதன் மேல் வெண்ணெய் தடவி பரிமாறினால் சுவையான ஹொட்டல் ஸ்டைல் தந்தூரி சிக்கன் தயார்.