பிரித்தானியாவில் பீரங்கியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த 23 வயது இராணுவ வீரர்: புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்கள்
பிரித்தானியாவில் 23 வயது இளம் இராணுவ வீரர் பீரங்கி வண்டி ஏறியதால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பான பல முக்கிய தகவ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் என்போர்டு கிராமத்தில் உள்ள சாலிஸ்பரி சமவெளியில் உள்ள பிரித்தானிய இராணுவ பயிற்சி தளத்தில் குறித்த சம்பவம் நடந்தது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 வயது Jethro Watson-Pickering எனும் இளம் வீரர் மீது பீரங்கி வாகனம் ஏறியது.
[சம்பவ இடத்துக்கு டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பியூசி மற்றும் லட்கர்ஷாலில் இருந்து 2 தீயணைப்பு இயந்திரங்களையும், ட்ரோபிரிட்ஜில் இருந்து ஒரு கனரக மீட்பு பிரிவும் வந்ததை அடுத்து வீரரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த வீரரின் புகைபடம் மற்றும் பெயர் விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன.
அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வீரரை ஏன் உயிருடன் காப்பாற்ற முடியவில்லை என்பது குறித்தும் அங்கு நடந்ததை குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீரங்கி வாகனம் வேகமாக சென்று மரத்தில் மோதி, குழுவினரை உள்ளே சிக்க வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வாகனத்தில் மேலும் வெடிபொருட்கள் நிரப்பட்டிருந்ததால், மீட்புக்குழு வீரர்கள் இராணுவ வீரர்களை விடுவிக்க 'பல மணிநேரம்' ஆனது.
இதற்கிடையில், ஜெத்ரோ வாட்சன்-பிக்கரிங்கை விடுவிக்க முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து தொடர்ந்து வில்ட்ஷயர் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


