இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர்
இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜம்பா விலகல்
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 29ஆம் திகதி தொடங்குகிறது. 
சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா (Adam Zampa) தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக தன்வீர் சங்கா (Tanveer Sangha) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஜோகா சிங் சிட்னி நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார்.
இந்தியரான இவர் பஞ்சாபில் உள்ள ஜலந்தருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் மனைவி சிட்னியில் கணக்காளராக பணிபுரிகிறார்.
6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்
BBL தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடும் சங்கா, 42 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இவர் 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
தற்போது 23 வயதாகும் தன்வீர் சங்கா, 2020ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அப்போது 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். 
அதனைத் தொடர்ந்து 2020/21 BBL சீசனில் சிட்னி தண்டர் அணிக்காக டி20யில் அறிமுகமானார். அந்த சீசனில் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்ந்தார்.
கடைசியாக 2023யில் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச போட்டியில் விளையாடிய சங்கா, இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே அணிக்கு எதிராகவே விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |