தப்பினார் இந்திய வம்சாவளி உள்துறைச் செயலர்: பிரித்தானிய பிரதமர் அனுப்பியுள்ள கடிதம்
பிரித்தானிய உள்துறைச் செயலர், வாகனம் ஓட்டும்போது விதிமீறலில் ஈடுபட்டதுடன், அதிகாரிகளிடம் தனக்கு தனிப்பட்ட சலுகைகள் அளிக்குமாறு கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விதிமீறலில் ஈடுபட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர்
இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன், அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது, வாகனம் ஓட்டும்போது விதிமீறலில் ஈடுபட்டதுடன் அதிகாரிகளிடம் தனக்கு தனிப்பட்ட சலுகைகள் அளிக்குமாறு கேட்டுள்ளார்.
அபராதம் செலுத்தி, அபராத புள்ளிகள் பெறுவது தனது ஓட்டுநர் உரிமத்தை பாதிக்கலாம் என்பதால், அதற்கு பதிலாக தனக்கு விழிப்புணர்வு வகுப்பு ஒன்றில் பங்கேற்க வழி செய்து தருமாறு கேட்டுள்ளார் அவர்.
Credit: Getty
ஆனால், அந்த வகுப்புகளிலும் மற்றவர்களுடன் இணைந்து பங்கேற்காமல், தனக்கு மட்டும் தனியாக வகுப்பு நடத்தமுடியுமா என்றும் கேட்டுள்ளார் சுவெல்லா.
இந்த விவகாரத்தை வெளிக்கொணர்ந்துள்ள லேபர் கட்சியினர், இந்த விடயத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய உடனடியாக விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடுமாறு பிரதமர் ரிஷியை வலியுறுத்தினர்.
தப்பினார் உள்துறைச் செயலர்
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், சுவெல்லாவுக்கு அனுப்பிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சுவெல்லா குறித்து தான் தனது ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவர் இந்த விடயம் தொடர்பாக விசாரணை தேவையில்லை என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Credit: Getty
இந்த விவகாரங்கள், அமைச்சரின் நடத்தை விதிகள் எதையும் மீறவில்லை என தான் முடிவு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதால், சுவெல்லாவின் பதவி தப்பியுள்ளது.
Credit: Getty
அதே நேரத்தில், சுவெல்லா சரியான வகையில் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம் என எச்சரித்துள்ள பிரதமர், நடந்த விடயங்கள் குறித்து விவரமாக தெரியப்படுத்தியதுடன், நடந்தவற்றிற்காக வருத்தமும் தெரிவித்து, மன்னிப்பும் கோரியுள்ளதால், சுவெல்லா இந்த விடயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டதை தான் மறுபடியும் உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Credit: AP

