150 மில்லியன் சொத்து இருந்தும் தாய்க்கு பணம் தர மறுக்கும் குவென்டின் டாரண்டினோ
Tarantino Refuses to Fund Mother Despite Wealth: மில்லியன் கணக்கில் சொத்து இருந்தும் குவென்டின் டாரண்டினோ பெற்ற தாய்க்கு பணம் தர மறுக்கும் காரணத்தை இங்கே பார்க்கலாம்.
தாய்க்கு பணம் தர மறுத்த குவென்டின் டாரண்டினோ
பிரபல இயக்குநர் குவென்டின் டாரண்டினோ, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றும், 150 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்து வைத்திருந்தும், தனது தாய்க்கு பணம் தர மறுத்துள்ளார்.
டாரண்டினோ, 12 வயதில் இருந்தபோது, தனது தாய் கானி சஸ்டூபில் (Connie Zastoupil), அவரது எழுத்துத் திறனை கேலி செய்து, துச்சமாக (little writing career) பேசியதாக நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த தருணத்தில், “என் வெற்றியில் இருந்து உனக்கு வீடு, கார், விடுமுறை என எதுவும் கிடையாது” என்று உறுதி எடுத்ததாக அவர் கூறினார்.
பின்னர், ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தபோதும், அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியுள்ளார்.
“என் தாயின் வார்த்தைகள் எனக்கு பாடமாக இருந்தது. குழந்தைகளிடம் பேசும் போது வார்த்தைகளுக்கு விளைவுகள் உண்டு” என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், ஒரு விதிவிலக்காக, IRS (Internal Revenue Service) பிரச்சினையில் சிக்கியபோது, தாய்க்கு உதவி செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு, வீடு அல்லது கார் வாங்கித் தரவில்லை என்று தெரிவித்தார்.
அவரது தாய், “என் மகனின் வெற்றியில் பெருமைப்படுகிறேன். குடும்பத்தையும், அவரையும் நேசிக்கிறேன். ஊடகங்களில் தவறான விளக்கங்கள் வேண்டாம்” என்று USA Today-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
டாரண்டினோ, ‘Pulp Fiction’ (1995) மற்றும் ‘Django Unchained’ (2013) படங்களுக்கு ஆஸ்கர் வென்றார். மேலும், ‘Reservoir Dogs’, ‘Kill Bill’, ‘Once Upon a Time in Hollywood’ போன்ற படங்கள் மூலம் தனித்துவமான கதை சொல்லும் திறனுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றார். இந்த சம்பவம், டாரண்டினோவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது வெற்றியின் பின்னணியில் உள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |