அனிருத் இந்த துறை பெண்ணைதான் திருமணம் செய்வார்; 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஜோதிடர்
tarot card reader predicted anirudh marry girl from broadcasting field: அனிருத் ஒளிபரப்பு துறையை சேர்ந்த பெண்ணைதான் திருமணம் செய்வார் என 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜோதிடர் அனிருத்திடம் கணித்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் - காவ்யா மாறனுக்கு வரும் நவம்பர் 11ஆம் திகதி க்ரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவ்யா மாறனின் பெற்றோர்களான கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி மாறன் முக்கிய பிரமுகர்களுக்கு திருமண வரவேற்பிற்கான அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் விஜய், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிபரப்புத்துறை பெண்ணுடன் திருமணம்
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்வு ஒன்றில், அனிருத் இந்த துறையை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வார் என கூறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Prediction came True... and I'm Still shocked 😮 https://t.co/Zty1JGZGG6
— Sᴀᴛʜ༏sʜ ⚠️ (@Kumar_0305) October 17, 2026
இதில் கணிப்பு கூறும் டாரட் கார்டு கணிப்பவர், அனிருத் தனது தந்தையுடன் ஒப்புதலுடன் காதல் திருமணம் செய்து கொள்வார் எனவும், அவர் திரைத்துறையை சேர்ந்த பெண் இல்லை. தொலைத்தொடர்பு அல்லது ஒளிபரப்புத் துறையைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வார் என்று கணித்திருக்கிறார்.
மணப்பெண் காவ்யா மாறன் ஒளிபரப்புத் துறையைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் எப்படி சரியாக கூறினார் என வியந்து வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட சன் குழுமம், 7 மொழிகளில் 37 தொலைக்காட்சி சேனல்கள், DTH ஒளிபரப்பு சேவை, 69 வானொலி நிலையங்கள், OTT தளம், தயாரிப்பு நிறுவனம் 3 தினசரி செய்தித்தாள்கள், 6 இதழ்கள் மற்றும் 3 விளையாட்டு அணிகளை நிர்வகித்து வருகிறது.
35 வயதான காவ்யா மாறன் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.