சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் குளிர்காலம் கடினமானதாக இருக்கும்: எச்சரிக்கும் அறிவியலாளர்
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலம் கடினமானதாக இருக்கக்கூடும் என சுவிஸ் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.
சுவிஸ் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரான Tanja Stadler கூறும்போது, அடுத்த சில மாதங்களுக்கு அரசு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டியிருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
புதிதாக நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், 30,000 பேர் வரை கூடுதலாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறும் Tanja Stadler, என்ன நடவடிக்கைகள் என்பதை அரசியல்வாதிகள்தான் முடிவுசெய்யவேண்டும் என்றார்.
அதேநேரத்தில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகவும் பயனளிக்கக்கூடியவையாக உள்ளன என்றும் கூறிய அவர், பணித்தலங்களிலும் சுகாதார பாஸ் அறிமுகம் செய்யப்படவேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.