தூங்கியதால் உலகக்கிண்ணப் போட்டியை தவறவிட்ட துணை கேப்டன்? அதிரடியாக நீக்கிய அணி
இந்திய அணிக்கு எதிரான உலகக்கிண்ண போட்டிக்கு முன்பு தூங்கியதால், வங்கதேச அணியின் துணைத் தலைவர் தஸ்கின் அகமது போட்டியை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் 8 சுற்று
வங்கதேச அணியின் துணைத் தலைவர் தஸ்கின் அகமது (Taskin Ahmed), உலகக்கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் விளையாடவில்லை.
அந்தப் போட்டியில் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
போட்டி தினத்தன்று தஸ்கின் அகமது தனது அறையில் ஆழ்ந்து தூங்கியிருக்கிறார். இதனால் அவர் அணி மைதானத்திற்கு செல்லும் பேருந்தை தவறவிட்டுள்ளார்.
தாமதமாக மைதானத்திற்கு வந்ததால்
பின்னர் தாமதமாக மைதானத்திற்கு வந்ததால் தஸ்கின் இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாட அணி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தஸ்கின் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''நான் சிறிது தாமதமாக வந்தேன். ஆனால் நான் நாணய சுழற்சி செய்வதற்கு முன் மைதானத்தை அடைந்தேன். நாணய சுழற்சிக்கு முன் 30-40 நிமிடங்களுக்கு முன்பு நான் மைதானத்திற்கு வந்தேன். நான் குழு பேருந்தை தவறவிட்டேன்.
பேருந்து காலை 8.35 மணிக்கு ஹொட்டலில் இருந்து புறப்பட்டது. காலை 8.43 மணிக்கு மைதானத்திற்கு புறப்பட்டேன். ஏறக்குறைய பேருந்துடன் மைதானத்தை அடைந்துவிட்டேன்.
நான் தாமதமாக வந்ததால் அவர்கள் என்னை அழைத்துச் செல்லவில்லை என்பது போல் இல்லை. எனினும், நான் எப்படியும் விளையாடப் போவதில்லை'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |