வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தையா? விஜய் பட நடிகைக்கு குழந்தை பிறந்த நிலையில் பிரபலம் சர்ச்சை கருத்து
வாடகைத்தாய் குறித்த சர்ச்சையான கருத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பதாக அறிவித்த 24 மணிநேரத்திற்குள் எழுத்தாளர் தஸ்லிமா இந்த கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
அவரின் டுவிட்டர் பதிவில், ஏழைப்பெண்கள் இருக்கிறதால் தான் வாடகைத்தாய் முறை சாத்தியமாகிறது. வசதியானவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக சமூகம் வறுமையில் இருப்பதையே விரும்புகின்றனர்.
Surrogacy is possible because there are poor women. Rich people always want the existence of poverty in the society for their own interests. If you badly need to raise a child, adopt a homeless one. Children must inherit your traits---it is just a selfish narcissistic ego.
— taslima nasreen (@taslimanasreen) January 22, 2022
நீங்கள் ஒரு குழந்தையை வளர்க்க முடியாதவராக இருந்தால் ஆதவரற்ற குழந்தையை தத்தெடுக்கலாம். குழந்தைகள் உங்களுடைய குணநலன்களை பெறவேண்டும் இது ஒரு நாசீசிஸ்டிக் (அகந்தை) ஈகோ என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, வாடகைத்தாய் மூலம் ரெடிமேட் குழந்தையை பெறும் தாய்மார்கள் எப்படி உணருகிறார்கள்? குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களைப் போன்ற உணர்வு அவர்களுக்கு குழந்தைகள்மீது இருக்குமா? என்றும் பதிவிட்டார்.
மேலும் பணக்காரப் பெண்கள் வாடகைத் தாயாக மாறும் வரை நான் வாடகைத் தாயை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தும் ரெடிமேட் குழந்தை என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்தினீர்கள் என பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.
How do those mothers feel when they get their readymade babies through surrogacy? Do they have the same feelings for the babies like the mothers who give birth to the babies?
— taslima nasreen (@taslimanasreen) January 22, 2022
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதோ அல்லது தத்தெடுப்பதோ ஒரு தம்பதியின் சொந்த தனிப்பட்ட முடிவு என்றும், சில மருத்துவக்காரணங்களால்கூட வாடகைத்தாய் முறை தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரியங்கா சோப்ராவை மறைமுகமாக தாக்கவே இந்த பதிவை தஸ்லிமா வெளியிட்டுள்ளார் எனவும் பலரும் கூறியுள்ளனர்.