அட்டகாசமான சுவையில் வெள்ளை சிக்கன் குருமா: ரெசிபி இதோ
இனி சிக்கன் எடுத்தால் இந்த வெள்ளை சிக்கன் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இந்த வெள்ளை சிக்கன் குருமா இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்வது?
  
தேவையான பொருட்கள்
- இஞ்சி- ஒரு துண்டு
 - பூண்டு- 8 பல்
 - பச்சை மிளகாய்- 4
 - துருவிய தேங்காய்- ½ கப்
 - சோம்பு- ஒரு ஸ்பூன்
 - கசகசா- ½ ஸ்பூன்
 - முந்திரி- 8
 - பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
 - எண்ணெய்- 2 ஸ்பூன்
 - பட்டை- 1
 - கிராம்பு- 4
 - ஏலக்காய்- 1
 - பிரியாணி இலை- 1
 - ஸ்டார் சோம்பு- 1
 - வெங்காயம்- 1
 - தக்காளி- 1
 - சிக்கன்- ¼ kg
 - கறிவேப்பிலை- 1 கொத்து
 - மல்லித்தழை- கைப்பிடி
 
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
  
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதில் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் வெள்ளை குருமா சாப்பிட தயாராகிவிடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     |