வெறும் 100 ரூபாய்க்கு Cancer தடுப்பு மாத்திரை., சாதித்த Tata நிறுவனம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் வராமல் தடுக்க, டாடா நிறுவனம் மாத்திரையை உருவாக்கியுள்ளது.
Tata Memorial Centre கண்டுபிடித்த இந்த மாத்திரையின் விலை 100 ரூபாய் மட்டுமே.
புற்றுநோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை ஆக்கிரமித்து, அவை மீண்டும் புற்றுநோயாக மாறும்.
ஆனால் இந்த மாத்திரையை உட்கொள்வதால், சிகிச்சைக்குப் பிறகு சிதைந்த புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும்.
இதனால் நோயாளி இரண்டாவது முறையாக புற்றுநோய் வராமல் இருப்பார் என டாடா அமைப்பு தெரிவித்துள்ளது.
பரிசோதனை எப்படி நடந்தது?
இந்த பரிசோதனைக்கு எலிகள் பயன்படுத்தப்பட்டு, முதலில் புற்றுநோய் செல்களை செலுத்தி, எலிகளுக்கு புற்றுநோயை உருவாக்கபட்டது.
அப்போது புற்றுநோயை குணப்படுத்த கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில எலிகளுக்கு இந்த மாத்திரையை உணவாக கொடுத்தனர். மாத்திரை சாப்பிட்ட எலிகளுக்கு 2வது முறையாக புற்றுநோய் வரவில்லை.
புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளைக் குறைப்பதற்காக ஜூன்-ஜூலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) அனுமதியைப் பெறக்கூடிய இந்த மாத்திரையில், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக டாடாவின் மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக Dr Rajendra Badwe கூறினார்.
ஒருமுறை அங்கீகரிக்கப்பட்ட மாத்திரையானது கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதமும், புற்றுநோய் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகளை 30 சதவீதமும் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.
மனைவி நீதா அம்பானிக்கு தலைவர் பதவி வழங்கும் முகேஷ் அம்பானி., உருவெடுக்கும் Reliance-Disney கூட்டு நிறுவனம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
cancer tablet by tata institute, cancer tablet tata, tata cancer tablet, tata cancer institute, FSSAI, Tata Memorial Hospital