டாடாவின் Curvv-க்கு போட்டியாக Citroen வெளியிடும் புதிய கூபே ஸ்டைல் கார்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன் (Citroen) தனது கூபே ஸ்டைல் SUV சிட்ரோயன் பசால்ட்டை (Citroen Basalt) விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 7-ஆம் திகதி டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் டாடா கர்வ்க்கு (Tata Curvv) போட்டியாக சிட்ரோயன் பசால்ட் வருகிறது.
ஆனால், சிட்ரோயன் பாசால்ட் ஆகஸ்ட் 2-ஆம் திகதியே சந்தைக்கு வருகிறது.
Tata Curvv, Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara மற்றும் Toyota Urban Cruiser Hyryder ஆகியவற்றுக்கு Citroen Basalt கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Citroen Basalt என்பது இந்திய சந்தையில் சிட்ரோயனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாவது கார் ஆகும்.
முன்னதாக C3 Hatchback, eC3 Electric Hatchback, C3 Aircross SUV, C5 Aircross SUV ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் திருவள்ளூர் யூனிட்டில் சிட்ரோயன் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
சிட்ரான் பாசால்ட் LED projector headlamps, upgraded tail lamps, புதிய alloy wheel designs, interior with touch screen infotainment system, digital instrument cluster, automatic climate control, front ventilated seats ஆகியவற்றைப் பெறுகிறது.
C3 Aircross மாடலில் Citroën Basalt 1.2 லிட்டர் Gen-3 Turbo Pure Tech பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
சிட்ரோயன் பாசால்ட் காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
tata curvv, Citroen Basalt, Tata Curvv launch date, Citroen Basalt launch date